டெல்டா வகை கொரோனா தொற்று ஆல்ஃபா வகையை விட அதிகமாகப் பரவக்கூடியது !

கொரோனா தொற்றின் பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மணிலா அரசுகள் தனி தனியே ஊரடங்கை அறிவித்துள்ளன.நாம் மூன்றாம் அலையின் தொடக்கத்தில் உள்ளோம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

டெல்டா வகை தொற்று, ஆல்ஃபா வகையை விட 40-60% அதிகமாகப் பரவக்கூடியது என மரபியலுக்கான இந்திய கொரோனா கூட்டமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் என் கே அரோரா எச்சரித்துள்ளார்.

கொரோனா தொற்றின் டெல்டா வகை மாறுபாடு இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்டது.தற்போது ஏற்படும் புதிய பாதிப்புகளில் 80%, இந்த வகை தொற்றாகும்.

மனித உயிரணுக்களில் புகுந்த பிறகு இந்த தொற்று வகை வேகமாகப் பரவுகிறது. நுரையீரல் போன்ற உறுப்புகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.