ஹோலி கொண்டாட்டத்திற்கு தடை !

ஹோலி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். வட மாநிலங்களில் இந்த பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள்.தற்போது கரோனா தொற்று உள்ள காலகட்டத்தில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவேண்டும்.

கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், பொது இடங்களில் ஹோலி மற்றும் ஷாப்-இ-பாரத் கொண்டாட்டங்களுக்கு ராஜஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. இந்த இரண்டு திருவிழாக்களும் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது.

ராஜஸ்தான் உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்படி, ஹோலி மற்றும் ஷாப்-இ-பாரத் ஆகிய விழாக்கள் அன்று பொது மைதானம், பூங்காக்கள், சந்தைகள் மற்றும் மத இடங்களில் எந்த நிகழ்வுகளையும் நடத்த முடியாது.

டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்கள் கரோனாவை கருத்தில் கொண்டு ஹோலி மற்றும் ஷாப்-இ-பாரத் கொண்டாடுவதை ஏற்கனவே தடை செய்துள்ளன.