தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் !

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிகம் பரவ தொடங்கியதால் தமிழக அரசு ஊரடங்கை பிறப்பித்தது.தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த ஊரடங்கள் கொரோனா தொற்றின் நாள் பாதிப்பு குறைந்து வருகிறது.இந்நிலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கில் தமிழக அரசு சார்பில் மேலும் 6 மாத காலம் அவகாசம் கேட்கப்பட்டது.ஆனால் கொரோனாவை காரணம் காட்டி தேர்தலை நடத்தாதது ஏற்புடையது அல்ல என்று நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தற்போது 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.