தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு

tamilnadu government
தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 14 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெற தகுதியான ஏனைய பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியானது 14 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

ஜனவரி 1 ஆம் தேதி முதல் அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக அதிகரித்து வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ 8.724 கோடி கூடுதல் செலவு ஏற்படும். தமிழக அரசுக்கு நிதிச்சுமை உள்ள சூழ்நிலையிலும் அகவிலைப்படியை 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

14 சதவீதம் அகவிலைப்படி அதிகரிப்பால் அரசு ஊழியர்களுக்கு ரூ 6000 முதல் ரூ 12 ஆயிரம் வரை ஊதியத்தில் உயர்வு ஏற்படும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. அகவிலைப்படி உயர்வுக்கு தமிழக தலைமைச் செயலக சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஊழியர்களின் சங்கங்கள், ஓய்வூதியதாரர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் 132 ஆம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே சட்டசபையில் விதி 110இன் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அளிக்கப்படும் என்றார். சட்டசபை அறிவிப்பின்படி அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் இன்றைய தினம் அகவிலைப்படி உயர்வு தொடர்பான தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Pudukottai CISF: துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் மூடல்