தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி, திருவாரூர் மற்றும் நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனை முறையே தூத்துக்குடி ஆட்சியர் செந்தில்ராஜ், திருவாரூர் ஆட்சியர் காயத்ரி மற்றும் நெல்லை ஆட்சியர் விஷ்ணு ஆகியோர் அறிவித்து உள்ளனர்.
இதேபோன்று கனமழை எதிரொலியாக, தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நாகை மற்றும் மயிலாடுதுறையிலும், புதுச்சேரியின் காரைக்கால் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: யூடியூப் பார்த்து குழந்தை பெற்றெடுத்த பள்ளி மாணவி



