வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சேலம், கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
நேற்று மத்திய கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிக்கின்றது. இது மேலும் வலுவடைந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், 24 ஆம் தேதி புயலாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வடக்கு ஒடிசா – பங்களாதேஷ் கரையை வரும் 26 ஆம் தேதி கடக்கக்கூடும்.



