மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் கங்கை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றில் வெள்ள அபாயம் அளவை தாண்டியதால் வெள்ளம் ஊருக்குள் புகுந்துள்ளது.இதனால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளதால் மக்கள் வெளியேற முடியவில்லை. பெரும்பாலான வீடுகளில் வெளியூர்களில் இருந்து வந்த மாணவர்கள் தங்கியிருந்து படித்து வருகிறார்கள். அவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல விரும்புகிறார்கள். ஆனால் வெள்ளத்தை கடக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.



