கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், இன்று முதல் (12ந்தேதி) 15ந்தேதி வரை அடுத்த 4 நாட்களுக்கு கன முதல் மிக கனமழை பெய்யும் என தெரிவித்து உள்ளது.

அவற்றில் கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெற கூடும் என்றும் தெரிவித்து உள்ளது. இதுதவிர ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.

சிவப்பு எச்சரிக்கை எனில், 24 மணிநேரத்தில் 20 செ.மீ. மழையும், ஆரஞ்சு எச்சரிக்கை எனில் 6 செ.மீ. முதல் 20 செ.மீ. மழையும் பெய்வதற்கான அடையாளம் ஆகும்.

இதையும் படிங்க: இன்றைய ராசி பலன்