Heavy Rain in Tamil Nadu: தமிழ்நாட்டிற்கு மிக கனமழை எச்சரிக்கை

TN Rain
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டிற்கு மிக கனமழை எச்சரிக்கை

Heavy Rain in Tamil Nadu: தமிழகத்தில் மார்ச் 9-ஆம் தேதி வரை மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும். நாளை டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நாளை மறுநாள் தஞ்சை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, செங்கல்பட்டு ஆகிய 15 மாவட்டங்களில் மார்ச் 7-ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருப்பூரில் ஓரிரு இடங்களில் மார்ச் 8ல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் 5 மாவட்டங்களில் தரைக்காற்று பலமாக வீசும் என்றும் கூறியுள்ளது.

Heavy Rain in Tamil Nadu: தமிழ்நாட்டில், கடலோர மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

8 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் மார்ச் 7ல் மிக கனமழைக்கு வாய்ப்பு

டெல்டா மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களுக்கு நாளை, நாளை மறுநாள் மிக கனமழைக்கான எச்சரிக்கை

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்

சென்னை பெருநகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளது

தமிழ்நாட்டில் மார்ச் 9ஆம் தேதி வரை மழை.!

மார்ச் 8ஆம் தேதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும்

மார்ச் 9ஆம் தேதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமானது வரையில் மழை பெய்யக்கூடும்

இதையும் படிங்க: Madurai Crime: காதலனின் தந்தையை கொன்ற காதலியின் தந்தை கைது