Semester Exam: பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு தேதி அறிவிப்பு

anna-university-semester-exam-timetable
செமஸ்டர் தேர்வு

Semester Exam: இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்களுக்கு, செமஸ்டர் தேர்வு மற்றும் புதிய கல்வியாண்டில் கல்லுாரி திறப்பு தேதியை அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

பொறியியல் மாணவர்களுக்கு  நேரடி செமஸ்டர் தேர்வு தேதிகள் மற்றும் அடுத்த கல்வியாண்டுக்கான கல்லூரி திறப்பு குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.  

தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் அதிகரித்ததை அடுத்து, கடந்த ஜனவரி மாதம் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. பின்னர் பிப்ரவரி 1 ஆம் தேதிக்கு பிறகே மீண்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி  வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடைபெற்று வந்தன.  தொடர்ந்து பொறியியல், பாலிடெக்னிக்  மற்றும் கலை , அறிவியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் வழியாகவே நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஆன்லைன் வழி தேர்வுக்கு பின்னர் பொறியியல் மாணவர்களுக்கு வரும் மார்ச் 7-ம் தேதி முதல் மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருதந்து.   இந்நிலையில் தற்போது   பொறியியல்  மாணவர்களுக்கு நடப்பு செமஸ்டருக்கான நேரடி எழுத்துத் தேர்வு மற்றும்  கல்லூரி திறப்பு பற்றி அண்ணா பல்கலைக்கழகம் செய்திக்குறிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது.

அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில் படிக்கும் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு, மார்ச் 16ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கப்படும். அடுத்த செமஸ்டருக்கான பாடத்திட்ட பகுதிகள், ஜூன் 16 வரையில் நடக்கும்.அதன்பின், ஜூன் 18 முதல் செய்முறை தேர்வுகளும்; ஜூன் 28ல் நடப்பு கல்வி ஆண்டுக்கான இறுதி செமஸ்டர் தேர்வும் நடத்தப்பட உள்ளது.

பின்னர், கோடை விடுமுறை விடப்பட்டு, புதிய கல்வி ஆண்டிற்கான வகுப்புகளை நடத்த, ஆக.,10ல் கல்லுாரிகள் திறக்கப்படும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: Madurai Crime: காதலனின் தந்தையை கொன்ற காதலியின் தந்தை கைது