நாளை 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாமானது சென்னை அருகே வட தமிழகம் – தெற்கு ஆந்திராவிற்கு இடையே நாளை அதிகாலை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்ட அறிவிப்பில், திருவண்ணாமலை, சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஏற்கனவே கனமழை பெய்து வரும் நிலையில் அது தொடர்ந்து மேலும் 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை, திருவள்ளூர், கடலூர், வேலூர், நாகை, காஞ்சிபுரம், நாமக்கல், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும்’ என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கனமழை காரணமாக சென்னை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.