சுனாமி எச்சரிக்கை மற்றும் நிலநடுக்கம் அச்சத்தில் நியூசிலாந்து மக்கள் !

நியூசிலாந்து அருகே கெர்மாடெக் தீவுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 7 .1 ஆகவும், இரண்டாவது நடுக்கம் 7 .4 ஆகவும் பதிவானது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின. சில மணி நேரத்தில் மீண்டும் 8 .1 என்ற அளவிலான நிலநடுக்கம் பதிவானது.

இதனால் பதற்றமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தை அடுத்து இருமுறை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது.

மேலும் நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. நிலைமையை தீவிரமாக கண்காணிப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.