பலாப்பழத்தில் இருக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளுங்கள் !

தமிழில் முக்கனி என்பது மா,பலா மற்றும் வாழை.இந்த பலாப்பழத்தில் பலாப்பழத்தில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை அடங்கியுள்ளன.

பலாப்பழத்தில் வைட்டமின் ஏ சக்தி நிறைந்திருக்கிறது. இந்த வைட்டமின் உடலின் நலத்திற்கும், குறிப்பாக கண்பார்வையின் நலத்திற்கு மிகவும் அவசியமாகும்.இது தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து இளமை தோற்றத்தை உண்டாக்கும்.

பொட்டாசியம் சத்து நிறைந்திருப்பதால் குறைந்த மற்றும் உயர் ரத்த அழுத்தத்தைச் சீராக்க உதவுகிறது. இதனால் மாரடைப்பு வராமல் தடுக்கப்படுகிறது.

பலாப்பழம் நச்சுகளையும், தீய செல்களின் வளர்ச்சியையும் அழிக்கும் தன்மை கொண்டது. எனவே பலாப்பழங்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு இந்த குடல் புற்று ஏற்படுவதற்கான ஆபத்து வெகுவாக குறைகிறது.