புதிய வைரஸ் குறித்து இந்தியாவில் ஆலோசனைக் கூட்டம் !

இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவிவருகிறது. இந்தப் புதிய வகை வைரசின் தன்மை குறித்து ஆலோசிக்க மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் உயர்மட்ட அலுவலர்கள் அடங்கிய கூட்டு கண்காணிப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.இது தொடர்பாக அவர்கள் கூறியது,இந்தியாவைப் பொறுத்தவரை, கரோனா பரவும் விதத்தில் இதுவரை பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை.

ஆனால், பிற நாடுகளில் கரோனா வைரசின் தன்மை எவ்வாறு மாறுபடுகிறது என்பதையும் கண்காணித்துவருகிறோம்.அந்த வகையில், இங்கிலாந்து நாட்டில் புதிய வகை கரோனா வைரஸ் பரவிவருகிறது.

இதன் தன்மை குறித்து ஆலோசனை நடத்த இன்றுஆலோசனை நடைபெறுகிறது.இங்கிலாந்தில் புதிய வகை கரோனா வைரஸ் பரவிவரும் சம்பவம் உலக நாடுகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.