வாரத்தில் ஒரு நாள் முருங்கை இலையை கட்டாயம் உணவில் சேருங்கள் !

முருங்கை இலை நம் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்த ஒரு உணவு.முருங்கை மரத்தின் இலைகள், பூ, காய்கள் எல்லாம் நமக்கு கிடைத்த மிக சிறந்த மருந்து.இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்.

முருங்கைக் கீரையில் ஆரஞ்சை விட 7 மடங்கு வைட்டமின் சத்துக்கள் அதிகமாக உள்ளது.மேலும் இந்த இலையில் நியசின், போலேட், மக்னீசியம், இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் ஜிங்க் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.

முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கும், விந்து விருத்திக்கும் சிறந்தது.

முருங்கை இலையை காய வைத்து பொடியாக்கி கூட சாப்பிடலாம்.சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சாப்பிட்டு வந்தால் நோய் கட்டுக்குள் வரும்.