நம் இந்திய நாடு என்பது பல மொழிகள் மற்றும் கலாச்சாரத்தை கொண்டுள்ளது.மேலும் அதிக மொழிகள் பேசப்படும் மாவட்டம் பெங்களூரு என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்நகரம் மக்கள்தொகையின் அடிப்படையில் இந்தியாவின் மூன்றாவது பெருநகரமாக இருக்கிறது.மேலும் ஏராளமான பொதுத்துறை கனரக தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள், விண்வெளி, தொலைத்தொடர்பு, மற்றும் பாதுகாப்பு துறை நிறுவனங்கள் இந்நகரில் அமைந்துள்ளன.
107 மொழிகள் பேசும் மக்கள் வாழ்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.பெங்களூருவில் 44.62 சதவீத மக்கள் கன்னடம் பேசுகின்றனர். மேலும் தமிழ் 15%, தெலுங்கு 14%, உருது 12%, இந்தி 6%, மலையாளம் 3%, மராத்தி 2%, காஷ்மீர், சிந்தி, உருது, கொங்கனி, சந்தாலி, மராத்தி, மணிப்பூரி மற்றும் நேபாளி உட்பட வேறுமொழிகளை சேர்ந்தவர்களும் கலந்து வசிக்கின்றனர்.



