சந்தோஷ் சுப்பிரமணியம் ஹாசினியின் பிறந்தநாள்..!

தமிழ் ரசிகர்களால் இன்று வரை மறக்க முடியாத நடிகையாக இருந்து வருகிறார் நடிகை ஜெனிலியா. சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஹாசினி கதாபாத்திரத்தில் வெகுளித்தனமான நடிப்பின் மூலம் அனைவரின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார்.

தென் இந்தியாவில் மிகச் சிறந்த நடிகையாக கொடிகட்டி பறந்து வந்த ஜெனிலியா ஹிந்தி திரைப்படத் துறையிலும் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்து மிக பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.

படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து அதில் தனது க்யூட்டான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து வந்த, இந்த கொஞ்சும் கிளி ஜெனிலியா இன்று தனது பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகிறார்.