தினமும் ஒரு மரமாவது நட முயற்சி செய்வேன்- நடிகர் மயில்சாமி

மயில்சாமி தமிழில் விரல் விட்டு எண்ணக்கூடிய நகைச்சுவை நடிகர்களில் இவரும் ஒருவர் இவருடைய முதல் படம் தாவணிக்கனவுகள் கூட்டத்தோடு கூட்டமாக மயில்சாமி நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து கன்னி ராசி என்ற படத்தில் நடித்த இவர் 1984 முதல் தற்போது வரை தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

நகைச்சுவை காட்சிகள் என்றால் மயில்சாமி சேர்த்துக் கொண்டால் அந்த நகைச்சுவை இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கும் அளவிற்கு மக்களிடம் இடம்பிடித்தார் மயில்சாமி.

மயில்சாமி எம்ஜிஆர் அவர்களின் தீவிர ரசிகர். எம்ஜிஆர் அவர்களுக்கு எப்படி தினமும் வள்ளுவர் கோட்டத்தில் மாலை போடுகிறேனோ அதுபோல விவேக் அவர்கள் நினைவாக என்னால் முடிந்தவரை தினமும் ஒரு மரமாவது நட முயற்சி செய்வேன் என்று உறுதி மொழி எடுத்துள்ளார் மயில்சாமி.

மயில்சாமி இன்று தனது 57ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது ரசிகர்கள் அவருக்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: இன்றைய ராசி பலன்