தைப்பூசம் ஜோதி தரிசன விழா..!

தைப்பூசத்தை முன்னிட்டு வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் 7 திரைகளை விலக்கி 150வது ஆண்டு ஜோதி தரிசன விழா நடைபெற்றது. இதில் ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில், வடலூரில் சத்திய ஞானசபையை நிறுவினார் வள்ளலார். தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளன்று, சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம்.

ஆண்டுதோறும் ஜோதி தரிசன விழா இங்கு கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அதன்படி 150ஆவது ஆண்டு ஜோதி தரிசன விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று சன்மார்க்க கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.