குஜராத் மாநில முதலமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார் விஜய் ரூபானி.
பாஜக மிக வலுவாக உள்ள குஜராத்தின் முதல்வராகக் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இருந்து வந்தர் விஜய் ரூபானி. இந்நிலையில், 65 வயதான விஜய் ரூபானி இன்று திடீரென தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத்திடம் விஜய் ரூபானி ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அவர் எதற்காக ராஜினாமா செய்தார் என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை. அதேபோல பாஜக சார்பிலும் விஜய் ரூபானி ராஜினாமா குறித்து எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை



