ஜிஎஸ்டி இழப்பீடு: மாநிலங்களுக்கு ரூ.6,000 கோடி வழங்கிய மத்திய அரசு

தற்போது, 60 சதவீத ஜிஎஸ்டி இழப்பீடு பற்றாக்குறை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தொகையில் ரூ.60,066.36 கோடி மாநிலங்களுக்கும், ரூ.5,933.64 கோடி 3 யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது

தமிழகம், ஜனவரி 11ம் தேதி வரை, மாநில மொத்த உற்பத்தியில் 0.50 சதவீதம் அளவுக்கு அதாவது ரூ.9,627 கோடி கூடுதலாக கடன் பெறவும், சிறப்பு ஏற்பாட்டின் மூலம் ரூ.4210.58 கோடி திரட்டவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி ரூ.444.34 கோடி கடன் கூடுதலாகப் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது, இவ்வாறு மத்திய நிதியமைச்சக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.