விவசாயிகளை தேசவிரோதிகளாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது- சிவசேனா கட்சி

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தை நிறுத்த மத்திய அரசுக்கு விருப்பமில்லை.

மேலும் விவசாயிகள் போராட்டத்தில் அரசியல் செய்து, அவர்களை தேசவிரோதிகளாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது என்று சிவசேனா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

விவசாயிகளின் போராட்டத்தையும், அவர்களின் துணிச்சலையும், விடாப்பிடியாக போராடுவதையும், பிரதமர் மோடி வரவேற்க வேண்டும். வேளான் சட்டங்களைத் திரும்பப் பெற்று விவசாயிகளை பிரதமர் மோடி மதிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், எப்போதும் மோடி பெரிதாக மதிக்கப்படுவார் எனவும் சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.