வருமான வரி நீட்டிப்பு இனியும் கிடையாது

வருமான வரி தாக்கலுக்கான காலக்கெடுவை இனி நீட்டிக்க முடியாது-மத்திய அரசு

தனிநபர் வருமான வரி அறிக்கை தாக்கலுக்கான காலக்கெடு ஜனவரி 10ஆம் தேதி வரையிலும் நிறுவனங்களுக்கான காலக்கெடு பிப்ரவரி 15ஆம் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதை மேலும் நீட்டிக்க வேண்டும் என குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த நிதியமைச்சகம் ஏற்கனவே மூன்று முறை கால நீட்டிப்பு மேற்கொள்ளப்பட்ட நிலையில், மேலும் நீட்டிப்பு என்பதற்கான சாத்தியமே இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.