உஷார் மக்களே..நெருங்கும் பண்டிகை காலம் எச்சரிக்கும் அரசு !

கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.மேலும் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

தொற்று எண்ணிக்கை குறைவதால் அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது.மேலும் ஒரு ஆண்டிற்கு மேலாக மூடப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன.

தற்போது பண்டிகை காலம் தொடங்கவுள்ளது.தீபாவளி,நவராத்திரி போன்ற பண்டிகைகள் வரிசை கட்டி நிக்கின்றன.இதனால் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.

எனவே இந்த பண்டிகை காலத்தில் கொரோனா தடுப்பு நெறிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கூட்டம் அதிகம் சேரும் இடங்களை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அடி தூள்..சென்னையில் டபுள் டக்கர் பாலம் !