இரண்டாம் கட்டமாக நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி ஒத்திகை !

இந்திய நாடு முழுவதும் காரோண தடுப்பூசி செலுத்தும் பனி தீவிரமாக நடந்து வருகிறது. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய இரண்டு கரோனா தடுப்பூசிகளை அவசர காலத்துக்கு பயன்படுத்த இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.

முதல் கட்டமாக நாடு முழுவதுள்ள 3 கோடி முன்கள பணியாளர்கள் உட்பட மொத்தம் 30 கோடி பேருக்கு தடுப்பூசியை செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும் , கடந்த 2ஆம் தேதி நாடு முழுவதும் 116 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. அன்றைய தினம், தடுப்பூசி போடுவற்கான தனி இடம், மருத்துவர்கள், செவிலியர்களின் தயார் நிலை, தடுப்பூசி போடுவதற்கு முன்பு செய்யவேண்டிய மருத்துவப் பரிசோதனைகள், தடுப்பூசி போட்ட நபர்களை தங்கவைப்பதர்கான இடம் ஆகியவற்றை அந்ததந்த மாநில சுகாதாரத் துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், நாடு தழுவிய இரண்டாவது கரோனா தடுப்பூசி ஒத்திகை நாளை மறுநாள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.