சென்னை தனியார் நிறுவனத்தில் சி.பி.ஐ பறிமுதல் செய்த 100 கிலோ தங்கம் மாயமானது குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தினத்தந்தியில் செய்தி வெளியாகி இருக்கிறது.
தங்கத்தை இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனம் சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு இந்திய தாதுக்கள் மற்றும் உலோக வர்த்தக கழகத்தின் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவதாக கூறி, சி.பி.ஐ. 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
டெல்லி காவல் துறைச் சட்டத்தின் கீழ் செயல்படும் சி.பி.ஐ. அமைப்பால் திருட்டு வழக்கு பதிவு செய்ய முடியாது. எனவே, தங்கம் மாயமானது குறித்து வங்கிகளின் சிறப்பு அதிகாரி ராமசுப்பிரமணியம், சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்யவேண்டும். இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸ் சூப்பிரண்டு பதவிக்கு குறையாத அதிகாரி புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும். இவரது புலன் விசாரணைக்கு, சி.பி.ஐ. அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.



