மீண்டும் சரிவில் தங்கம் விலை

gold rate
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

சென்னையில் தங்கம் விலை மீண்டும் அதிரடியாகக் குறைந்துள்ளது. நேற்று 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 4,754-க்கு விற்கப்பட்டது. இதனால் சவரன் ரூ.38,032 என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாகக் குறைந்துள்ளது.

அதாவது கிராமுக்கு ரூ.54 குறைந்து, 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,700 ஆக இருக்கிறது. இதனால் ஒரு சவரன் ரூ.37,600-க்கு விற்கப்படுகிறது. இதன்படி சவரனுக்கு ரூ.432 குறைந்துள்ளது.

இந்நிலையில் வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 73.10 என்ற விலையில் இருந்தது. இன்று ரூ. 4.10 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 69-க்கு விற்கப்படுகிறது. மூன்றாவது நாளாக தங்கமும், வெள்ளியும் விலை குறைந்திருப்பதால், மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் வாடிக்கையாளர்கள்.