இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட
முள்ளிவாய்க்கால் நினைவு தூண், நள்ளிரவில் இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு இறுதிக்கட்ட ஈழப்போரில், லட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டதை நினைவுகூறும் விதமாக, யாழ்ப்பாணம்
பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் கடந்த
2019ம் ஆண்டு மாணவர்களால் அமைக்கப்பட்டது.
இந்நிலையில்,போரில் உயிர்நீத்த தமிழர்களின் அடையாளமாக விளங்கிய
நினைவுத் தூணை இலங்கை அரசு இரவோடு இரவாக ராட்சத
இயந்திரங்களை கொண்டு இடித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு
தெரிவித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மாணவர்கள்
போராட்டத்த்தில் ஈடுபட்டுள்ளனர்.




