Gold Rate: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,906 ஆக உயர்வு

தங்கம் விலை உயர்வு
தங்கம் விலை உயர்வு

Gold Rate: சமீப காலமாகவே தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் மகிழ்ச்சி தரும் விதமாக நேற்று தங்கம் விலை 800 ரூபாய்க்கு மேல் குறைக்கப்பட்டது. இந்நிலையில், அந்த மகிழ்ச்சி நீடிப்பதற்குள் இன்று மீண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.

சென்னையில் இன்று (மார்ச் 11) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,906 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,885 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 39,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 168 ரூபாய் உயர்ந்து 39,248 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று 5,284 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 5,305 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று 42,272 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 168 ரூபாய் உயர்ந்து 42,440 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,820 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,820 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,820 ஆகவும், கேரளாவில் ரூ.4,827 ஆகவும், டெல்லியில் ரூ.4,820 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,820 ஆகவும், ஒசூரில் ரூ.4,911 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,914 ஆகவும் இருக்கிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.74 ஆக இருந்தது. இன்று அது ரூ.74.60 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 74,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Today Gold rate in chennai

இதையும் படிங்க: MK Stalin: முதல்வர் ஸ்டாலினுக்கு மாணவர்கள் உருக்கமான கோரிக்கை