திமுக சார்பில் ‘கோ பேக் மோடி’ விளம்பரம்- கடும் கொந்தளிப்பில் பா.ஜ. வினர்

‘கோ பேக் மோடி’ என்ற விளம்பரத்தை தி.மு.க., வினர் அழிக்கவில்லை எனில் பா.ஜ. வினர் அதை அழிப்பர்’ என பா.ஜ. மாநில துணைத்தலைவர் அண்ணாமலை, மாஜி அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய பா.ஜ. அரசை கடுமையாக தி.மு.க. விமர்சனம் செய்து வருகிறது. நவ.,10ல் கரூர் திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகில் சேலம்- மதுரை புறவழிச்சாலை மேம்பால சுவற்றில் ‘கோ பேக் மோடி’ என தி.மு.க. சார்பில் விளம்பரம் எழுதப்பட்டது. மேலும் ஈரோடு சாலை, வெங்கமேடு உட்பட பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.