ரிசர்வ் வங்கி கணிப்பைவிட ஜிடிபி வளர்ச்சி வேகமாக இருக்கும் – சரண் சிங்

இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் பண்டிகை காலம் உள்ளிட்டவற்றால் தேவை அதிகரித்ததால் ஜிடிபி வளர்ச்சி ரிசர்வ் வங்கியின் கணிப்பைவிட வேகமாக இருக்கும் என்று மூத்த பொருளாதார வல்லுநர் பேராசிரியர் சரண் சிங் தெரிவித்துள்ளார்.

இரண்டாம் காலாண்டின் முடிவுகள் சிறப்பாக இருந்ததும், வரும் நாள்களில் பண்டிகை மற்றும் திருமண மாதங்கள் நிறைய உள்ளன என்பதாலேயே வளர்ச்சி வேகமாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்றார்.அடுத்த நிதியாண்டின் (ஏப்ரல்-செப்டம்பர்) முதல் அரையாண்டில் இந்தியாவின் ஜிடிபி கரோனாவுக்கு முந்தைய நிலைக்குச் செல்லும் என்றும் சக்திகாந்த தாஸ் தெரிவித்திருந்தார். அதாவது முதல் அரையாண்டில்

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.5 விழுக்காட்டிலிருந்து 21.9 விழுக்காடாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.சரண் சிங் மேலும் கூறுகையில், “ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ விகிதங்கள் எவ்வித மாற்றமுமின்றி இருப்பதும் அதிக பணவீக்கத்திற்கு காரணம்” என்று குற்றஞ்சாட்டினார்.