கவுதம் மேனன் மற்றும் சிம்பு இணையும் படத்தின் பெயர் !

கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் படத்தின் பெயர் வெளியீட்டுள்ளது.ரசிகர்களின் பேஃவரட் கூட்டணியாக கவுதம் மேனன் – சிம்பு – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.

இதற்கு முன்பு வெளியான இவர்களது படமான விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படங்கள் இன்றளவும் ரசிகர் மத்தியில் பிரபலமானவை.

இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு, “நதிகளிலே நீராடும் சூரியன்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது சிம்புவின் 47வது படமாகும்.