12th students: பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

full-day-classes-for-tn-12th-std-students
பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

12th students: தமிழக பள்ளிகளில் 100% மாணவர்கள் வருகையுடன் முழு நேரம் வகுப்புகளை நடத்தி விரைந்து பாடங்களை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கற்பித்தல் இடைவெளியை சரிசெய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்த பிறகு கடந்த 2021 செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு. அரையாண்டு விடுமுறையும் அளிக்கப்பட்டது. இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் வேகமெடுக்க தொடங்கியது. அதனால் மாணவர்களின் நலன் கருதி ஜனவரி 31ம் தேதி வரை மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அதனால் மாணவர்களின் கல்வி நிலை மீண்டும் பாதிப்படைந்துள்ளது. இந்த வருடம் 10,12ம் வகுப்புகளுக்கு மே மாதம் பொதுத் தேர்வை நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்ட நிலையில் பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் தேர்வை நடத்துவதிலும் தேர்வுக்குரிய பாடங்களை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த நிலையில் சற்று பாதிப்பு எண்ணிக்கை இறங்கு முகத்தில் செல்ல தொடங்கியதும் கடந்த 1ம் தேதி முதல் 1 – 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

தற்போது வழக்கம் போல பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 100% மாணவர்களுடன் முழு நேரம் வகுப்புகளை நடத்தி விரைந்து வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் ஊரடங்கு காரணமாக பெரும்பாலான நாட்களில் கற்பித்தல் பணி நடக்கவில்லை.அதனால் தற்போது மீதம் இருக்கும் நாட்களை முழுமையாக பயன்படுத்தி, கற்பித்தல் இடைவெளியை சரி செய்யுமாறு, பள்ளி நிர்வாகத்தினருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Full day classes for 12th students

இதையும் படிங்க: secret of bouncy hair : அடர்த்தியான கூந்தல் வேண்டுமா !

இதையும் படிங்க: education news : மாணவர்கள் கவனத்திற்கு..நாளை மறுதினம் தொடங்குகிறது !

இதையும் படிங்க: வினாத்தாள் கசிந்த விவகாரம்- திருவண்ணாமலை மாவட்ட கல்வி அதிகாரி சஸ்பெண்டு