Decorative vehicles: அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தும் காலம் நீட்டிப்பு

extension-of-the-period-of-display-of-decorative-vehicles
அலங்கார ஊர்திகள்

Decorative vehicles : தமிழகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள அலங்கார ஊர்திகள் மேலும் ஒரு வாரம் மெரினாவில் நிறுத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில்,

சென்னையில் 26.01.2022 அன்று நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் செய்தித் துறை சார்பில் விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் மூன்று அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் கண்டுகளிக்கின்ற வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 26.01.2022 அன்று அந்த ஊர்திகளை சென்னை, தீவுத்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்ட மக்களிடையே சென்று மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ள இந்த அலங்கார ஊர்திகள் சென்னை மாநகர மக்கள் கண்டு களித்திடும் வகையில் சென்னை மெரினா கடற்கரை இணைப்புச் சாலையில் விவேகானந்தர் இல்லம் எதிரே பொதுமக்களின் பார்வைக்கு 20.02.2022 முதல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நாள்தோறும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் பெரும்திரளாக இந்த அலங்கார ஊர்திகளை பார்வையிட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 21.2.2022 அன்று இந்த ஊர்திகளைப் பார்வையிட்டு அங்கு பெரும்திரளாக கூடியிருந்த மாணவச் செல்வங்களுடன் கலந்துரையாடினார். சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு விடுத்த கோரிக்கையை ஏற்று, மேலும் ஒரு வார காலத்திற்கு அவ்விடத்தில் இந்த அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்கள்.

Removal of decorative vehicles at the Marina

இதையும் படிங்க: long hair secrets : கூந்தல் கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர இதை செய்யுங்கள்..!

ங்கஇதையும் படிங்க: Lighter Underarms: அக்குள் பகுதியில் கருமை மறைய இதை தடவினால் போதும்..!

ங்கஇதையும் படிங்க: flower face pack : சருமம் பளபளவென மாற மலர் ஃபேஸ் பேக்குகள் !

ங்கஇதையும் படிங்க: Benefits Of Massage Oil : மசாஜ் எண்ணெயின் நன்மைகள் !