தமிழகத்தில் திறக்கப்படும் அங்கன்வாடி மையங்கள் !

கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.மேலும் நேற்று முதல் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது செப் 1 முதல் அங்கன்வாடி மையங்களை திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, அங்கன்வாடி மையத்திற்குள் பணியாளர்கள் நுழையும் போது கைகளை சோப்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் பணியாளர்கள் கட்டாயம் முக‌கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 வயது முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சூடான உணவு வழங்க வேண்டும். காலை 11.30 முதல் 12.30 மணி வரை அங்கன்வாடிகளிலேயே மதிய உணவை வழங்கிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ணியாளர்கள் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.