’அதானிக்குக் கடன் வழங்கினால், எஸ்பிஐ பசுமைப் பத்திரங்களை விற்போம்’ – பிரான்ஸ் நிறுவனம்

ஆஸ்திரேலியாவில் அதானி குழுமத்தால் நடத்தப்படவுள்ள நிலக்கரி சுரங்கப் பணிகளுக்காக எஸ்பிஐ வங்கி கடன் வழங்கினால், நாங்கள் அதன் பசுமைப் பத்திரங்களை விற்போம் என பிரான்ஸ் சொத்து மேலாண்மை நிறுவனமான அமுண்டி அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் இயக்குநர் ஜாக்கஸ் பார்பரீஸ் கூறுகையில், ”அதானி குழுமம் சார்பாக மேற்கொள்ளப்படவுள்ள இந்தத் திட்டத்திற்கு எஸ்பிஐ நிதியளிக்கக்கூடாது என்று நாங்கள் கருதுகிறோம். ஆனால் நிதியளிப்பது அவர்களின் முடிவு தான். ஒருவேளை அவர்கள் நிதியளித்தால் நாங்கள் முதலீடு செய்வதிலிருந்து விலகுவோம். சுரங்கத்திற்கு நிதியளிப்பது என்பது பசுமைப் பத்திர உத்தரவாததிற்கு முரணான நடவடிக்கை. நாங்கள் ஏற்கனவே எஸ்பிஐயிடம் எங்களின் முடிவைக் கூறிவிட்டோம். அவர்களின் பதிலுக்காக தற்போது காத்திருக்கிறோம்” என்றார்.

பிரான்சிஸ் உள்ள அமுண்டி நிறுவனம், ஐரோப்பாவின் பெரும் சொத்து மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் சார்பாக 1,650 பில்லியன் யூரோக்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.