மாணவர்களுக்கு இலவச லேப்டாப், உதவித்தொகை அறிவிப்பு

தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வந்தது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 68 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படவிருக்கிறது என்றும் அதற்காக ரூ.10, 200 கோடி செலவாகும் என்றும் தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டிருந்தது.

அந்த வகையில் தோல் தொழில்நுட்ப கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு இலவச விலையில்லா லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தரமணியில் இயங்கி வரும் சிபிடி கல்வி வளாகத்தில் உள்ள தோல் தொழில்நுட்ப பயிலகத்தில் மூன்றரை ஆண்டு பட்டப் படிப்புக்காக சேரும் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப், சென்று வர இலவச பஸ்பாஸ் மற்றும் உதவித்தொகையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.