தீபாவளி பண்டிகை: ரேஷன் கார்டுக்கு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசம்

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையையொட்டி குடும்ப அட்டை தாரர்களுக்கு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசியை அம்மாநில அரசு இலவசமாக வழங்குகிறது.

இது தொடர்பாக புதுச்சேரி அரசு செயலர் உதயகுமார் கூட்டுறவுத்துறை பதிவாளருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தீபாவளியையொட்டி அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ சர்க்கரையும் பத்து கிலோ அரிசியும் இலவசமாக தர முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் நியாயவிலை கடைகள் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அத்துடன் கடைகளின் பட்டியல் விவரத்தையும் இரண்டு நாட்களுக்குள் தரவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது