திருப்பதி ஏழுமலையான் கோவில்: இலவச தரிசன டோக்கன் எண்ணிக்கை அதிகரிப்பு..!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டோக்கன் எண்ணிக்கையை 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாக உயர்த்தி உள்ளது. தரிசனத்துக்காக முன்பதிவில்லாமல் வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யாமல் திரும்பக்கூடாது என தேவஸ்தானம் இந்த முடிவை எடுத்துள்ளது.

அதன் மூலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் வரை சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.