உங்கள் உடலுக்கு இரும்புச்சத்து தேவையா – இதை எடுத்து கொள்ளுங்கள் !

உடல் சீராக இயங்க இரத்தம் தேவை.இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கும்போது ரத்தச் செல்களால் ஆக்சிஜனை தேவையான அளவு செல்களுக்கு எடுத்துச் செல்ல முடியாது. இதைத்தான் ரத்தச்சோகை என்கிறோம்.

நம் வீட்டிலிருக்கும் உணவை கொண்டு இரும்பு சத்தை மேம்படுத்தலாம்.
இரும்பு சத்து குறைவாக இருந்தால் தலைவலி,மயக்கம்.மூச்சுவாங்குதல் மற்றும் சருமம் வெளுத்துப்போகும்.நாம் சாப்பிடும் உணவில் இவையெல்லாம் சேர்த்து உண்ண வேண்டும்.

முதலில் கீரை வகைகள் முருங்கைக் கீரை வாரத்தில் மூன்று முறை முருங்கை இலையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பொன்னாங்கன்னிக்கீரையைப் பொரியல் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகி உடல் பலம் பெறும். புதினாக் கீரை மற்றும் அரைக் கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்து பகல் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் இரத்தம் உற்பத்தியாகும்.

அடுத்தது பீட்ரூட் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பீட்ரூட் அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது. இரும்பு, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் இதில் வளமையாக உள்ளது.

மேலும் முட்டை,உலர் திராட்சை,எள்ளு,மற்றும் மாதுளை போன்றவைகளை நம் உணவில் சேர்த்து வந்தால் ரத்தம் புதிதாக உற்பத்தியாகும்.