ஆட்டோமொபைல் துறையினருக்கு என்ன சலுகை தெரியுமா?

ஆட்டோமொபல் துறையினரின் பல வருட எதிர்பார்ப்பான ஸ்கிராப்பேஜ் பாலிசி பற்றிய அறிவிப்பினைக் கொடுத்துள்ளது இந்த பட்ஜெட் தாக்கல்.

இது உண்மையில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள ஆட்டோமொபைல் துறையினருக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும். இது பழைய வாகனங்களை சந்தையை விட்டு அகற்ற உதவும். இது புதிய வாகனங்களுக்கான தேவையை அதிகரிக்கும்.

15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களின் பதிவை ரத்து செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு குறிப்பாக அதிகம் மாசடைந்த நகரங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு அதிகப்படியான பசுமை வரி (சாலை வரியில் 50%) விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக இதோடு இந்த ஸ்கிராப் பாலிசியும் வாகனத் துறையை மீட்டெடுக்க உதவும்.