வரும் மார்ச் மாதத்திற்குள் இலக்கை எட்ட வேண்டும் – நிர்மலா சீதாராமன்

2020-21ஆம் ஆண்டில் அரசின் செலவீன இலக்கை அடைய பொதுத்துறை நிறுவனங்கள் விரைந்து செயலாற்ற வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.

மின்சாரம், கணிமம், அனுசக்தி உள்ளிட்ட 10 பொதுத்துறை நிறுவனத்தைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

அப்போது அவர், நாட்டின் பொருளாதர வளர்ச்சிக்கு அரசு செலவீனம் என்பது முக்கிய பங்களிப்பாகும். எனவே, நிறுவனங்கள் இந்த பாதையில் சிறப்பான பங்களிப்பை மேற்கொண்டால் கோவிட்-19 தாக்கத்திலிருந்து விரைவான மீட்சியை கானாலம் என்றார்.

மூன்றாவது காலாண்டு இறுதிக்குள் 75 விழுக்காடு இலக்கையும், நான்காவது காலாண்டு இறுதிக்குள் 100 விழுக்காடுக்கும் மேலான இலக்கையும் எட்ட நிறுவனங்கள் முயற்சி செய்ய வேண்டும் என நிதியமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.