இன்று முதல் மளிகை பொருள் ‘டோர் டெலிவரி’..!

தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் காய், பழங்களை போன்று மளிகை பொருட்களும் டோர் டெலிவரி செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் 7,500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாநகராட்சியில் லைசென்ஸ் பெற்று கடை நடத்தி வருகின்றனர். இந்த கடைக்காரர்களுக்கு மட்டும் இருசக்கர வாகனங்களில் சென்று பொருட்களை விற்பனை செய்ய மாநகராட்சியில் இருந்து நேற்று டோக்கன்கள் வழங்கப்பட்டன. டோக்கன் வாங்கிய கடைக்காரர்களின் தொலைபேசி எண்கள் http://www.chennaicorporation.gov.in என்ற மாநகராட்சியின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த கடைக்காரரின் கடை பெயர், அவரது பெயர், செல்போன், வாட்ஸ்-அப் நம்பர்கள் போன்ற முழு விவரங்களும் அந்த இணைய தளத்தில் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.