நொய்டாவில் தடையை மீறி பட்டாசு விற்ற 5 பேர் கைது

தடையை மீறி பட்டாசு விற்பனை செய்த 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால், அங்கு நவம்பர் 30 வரை பட்டாசு வெடிப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது. அம்மாநில அரசு சார்பிலும் பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாம் கட்ட காவல் நிலைய பகுதியில் சாஜித் சைஃபி என்பவர் கைது செய்யப்பட்டு, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. நொய்டா செக்டார் 22-இல் அகிலேஷ் பால் என்பவர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடமிருந்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசு பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக வெடிபொருள் சட்ட விதியின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.