டெல்டா பிளஸ் வகை கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு

இந்தியாவில் டெல்டா பிளஸ் வகை கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 50 ஆயிரத்தை கடந்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, கடந்த 24 மணி நேரத்தில், 54 ஆயிரத்து 69 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

டெல்டா பிளஸ் வகை உருமாற்றத்தின் மூன்று குணங்களை மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி வேகமாகப் பரவுதல், நுரையீரல் செல்களோடு ஒட்டிக்கொள்ளுதல், நோய் எதிர்ப்புத் தன்மையை குறைத்தல் ஆகியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்டா பிளஸ் வைரஸால், ஏற்படும் தீவிர பாதிப்பில் இருந்து தடுப்பூசிகள் பாதுகாப்பு தரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.