பட்டாசு ஆலையில் தீ விபத்து 12 பேர் உயிரிழப்பு !

சாத்தூர் அருகே அச்சங்குளம் என்ற கிராமத்தில் இருக்கும் மாரியம்மாள் பட்டாசு ஆலை என்ற ஆலையில் இன்று தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.திடீரென மதியம் 12 மணியளவில் ஆலையின் ஒரு பகுதியில் பட்டாசுகள் வெடித்துச் சிதறின.

இதில் மேலும் படுகாயமடைந்த 16 நபர்கள் சாத்தூர்,கோவில்பட்டி,சிவகாசி மருத்துவமனைகளில் அனுமதிக்க பட்டுள்ளனர்.இதில் சிலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகியுள்ளன.

மதுரையிலிருந்து கூடுதலான மருத்துவர்களை அனுப்ப மாநில சுகாதாரத் துறை ஏற்படுகளைச் செய்துள்ளது. பட்டாசு ஆலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.இந்த விபத்துக்கு பிரதமர் மோடி தனது இரங்கலையும் மற்றும் பாதிக்கப்பட்டோருக்கு நிதிஉதவி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.