வாக்களிப்போம் வாருங்கள்.. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு -தமிழ்நாடு !

தமிழகத்தில் 2021 சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அணைத்து போட்டியிடும் கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டுவருகின்றது.இந்நிலையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஒரு தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு இடம் பெயர்தல்,இருப்பிடத்தின் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள கடந்த நவம்பர், டிசம்பரில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

மேலும் இதற்காக , ஆன்லைன் மூலமாகவும் படிவங்கள் பெறப்பட்டன. இந்த முறையில் விண்ணப்பங்கள் பல தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை பரிசீலித்து தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கியது.

மேலும் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு
மொத்த வாக்காளர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 ஆகும். இவர்களில் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 3,18,28,727 பேர் இடம்பெற்றுள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 7,246 பேர் இடம்பெற்றுள்ளனர்.