ஜந்தர் மந்தருக்கு மாறிய போராட்டம் !

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்திற்கு பலவித ஆதரவும் மற்றும் எதிர்ப்பும் இருந்து வந்தது.

விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.கரோனா தொற்று இருக்கும் காலத்தில் கூட விவசாயிகள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து போராடி வந்தனர்.

தற்போது சிங்குர் எல்லையில் இருந்து டெல்லி ஜந்தர் மந்தருக்கு போராட்டக் களத்தை விவசாயிகள் மாற்றியுள்ளனர்.மேலும் புதிய வேளாண் திட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று கூறி அவர்கள் கோஷமிட்டனர்.போராட்டம் நடந்து வருவதை ஒட்டி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் இந்த போராட்டத்தில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை அதிகபட்சம் 200 பேர் மட்டுமே கலந்துகொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.