பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினிக்கு கொரோனா !

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும் நடிகையுமான விஜே அக்ஷயா கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘ரோஜா’வில் அனுவாக நடித்ததன் மூலம் பிரபலமாக உள்ளார் . சன் டிவியின் வணக்கம் தமிழா என்ற பிரபலமான காலை நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக தோன்றியுள்ளார்

இது குறித்து அக்ஷயா தெரிவித்துள்ளது,ஆரம்பத்தில் எனக்கு மூச்சு விடுவதில் சற்று சிரமம் இருந்தது.அதனால் நான் மருத்துவரை சென்று பார்த்தேன். பரிசோதனை முடிவில் எனக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் அவர் தனிமைப்படுத்திக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார் . மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.