தமிழகத்தில் போலியான பத்திர பதிவுகளை பதிவுத்துறை தலைவரே நேரடியாக ரத்து செய்ய அதிகாரம் வழங்கும் புதிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.இதனை தாக்கல் செய்தார் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி.
போலியான பத்திரப் பதிவுகளை, துறை தலைவரே நேரடியாக ரத்து செய்வதற்கு அதிகாரம் வழங்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் அமைச்சர் முன்பு தெரிவித்திருந்தார்.
போலியாக ஒருவர் பத்திரப்பதிவு செய்திருந்தால் அதனை நீதிமன்றம் மட்டுமே ரத்து செய்ய முடியும் என்ற நிலை மாறி இனி பத்திரப்பதிவு தலைவரே ரத்து செய்யலாம் என்று மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.



